Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

போராக்காய் தீவை மூட பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் ஆயத்தம்

பிலிப்பீன்ஸின் உல்லாசத் தலமான போராக்காய் (Boracay) தீவை மூடும் பணிகளில், அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
போராக்காய் தீவை மூட பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் ஆயத்தம்

(படம்: Jack Board)

பிலிப்பீன்ஸின் உல்லாசத் தலமான போராக்காய் (Boracay) தீவை மூடும் பணிகளில், அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

துப்பாக்கி ஏந்திய காவல்துறை அதிகாரிகள், தீவின் நுழைவாயில்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அதனை அடுத்து, நாளை தொடங்கி அடுத்த ஆறு மாத காலத்திற்கு அந்தத் தீவு பொதுமக்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, அந்தச் சுற்றுலாத் தலத்தை, பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடார்ட்டே சாக்கடைக் குழி என்று வர்ணித்திருந்தார். அதன் காரணமாக, வருகையாளர்களுக்கு அங்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்