Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இன்று முதல் 6 மாதங்களுக்குப் போராக்காய் தீவு மூடப்படும்

பிலிப்பீன்ஸின் முன்னணி சுற்றுலா தீவான போராக்காய், இன்று முதல் 6 மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸின் முன்னணி சுற்றுலா தீவான போராக்காய், இன்று முதல் 6 மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

பெரிய அளவில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக, அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அந்தத் தீவைத் தற்காலிகமாக மூடுவதற்கு, அதிபர் ரோட்ரிகோ டுடார்ட்டே உத்தரவிட்டார்.

அந்தச் சுற்றுலா தீவு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.

அந்தத் தீவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பயணப் படகுகள் மூலம் வெளியேறினர்.

பிழைப்புக்குச் சுற்றுப்பயணிகளை நம்பியிருக்கும் அந்தத் தீவு மக்களுக்கு அது பேரடியாகக் கருதப்படுகிறது.

தீவு மூடப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் என முன்னுரைத்து, காவல்துறை, பாவனைப் பயிற்சிகளை நடத்தியது.

அந்தத் தீவுக்குப் புதுப்பொலிவு தரும் நடவடிக்கைகளில் தலையிடுவோர், கைதுசெய்யப்படுவர் என்று அதிபர் டுடார்ட்டே எச்சரித்துள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்