Images
  • 021117 - molest (1)

தந்தை அடித்ததில் 10 வயதுச் சிறுவன் மாண்டதாகச் சந்தேகம்

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் தந்தை அடித்ததில் 10 வயதுச் சிறுவன் மாண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

நேற்று முன்தினம் (5 டிசம்பர்) சிறுவன் சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

பரிசோதனையில் சிறுவனின் உடல், தலை, கால், கை எனப் பெரும்பாலான பகுதிகளில் காயங்கள் இருந்ததாகக் காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

காயங்களால் சிறுவன் மாண்டதாகத் தடயவியல் அறிக்கை கூறியது.
சிறுவனின் 43 வயது தந்தை கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சுமார் இரண்டு மாதத்துக்கு முன்னர் சிறுவனின் தாயார் வீட்டை விட்டு வெளியானதாகவும் அப்போதிலிருந்து சிறுவன், தந்தையின் பராமரிப்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
 

Top