Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: மூளை தொடர்பான நோயால் 31 குழந்தைகள் மரணம்

இந்தியாவில் மூளை தொடர்பான ஒருவகை நோயால் கடந்த 10 நாள்களில் மட்டும் 31 குழந்தைகள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியா: மூளை தொடர்பான நோயால் 31 குழந்தைகள் மரணம்

படம்: AFP

இந்தியாவில் மூளை தொடர்பான ஒருவகை நோயால் கடந்த 10 நாள்களில் மட்டும் 31 குழந்தைகள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 40 குழந்தைகள் அந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர்.

நோய்க்குக் காரணம் லைச்சி பழத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருள் நஞ்சாக மாறியிருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மரணச் சம்பவங்கள் அனைத்தும் பீகார் மாநிலத்தில் உள்ள முசாஃபர்புர் (Muzaffarpur) வட்டாரத்தில் இருக்கும் இரண்டு மருத்துவமனைகளில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முசாஃபர்புர் வட்டாரம் லைச்சி பழ விளைச்சலுக்குப் பிரபலமானது.

மாண்ட குழந்தைகளின் இரத்தத்தில் குளூக்கோஸ் சத்தின் அளவு திடீரென்று குறைந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

2014ஆம் ஆண்டு மட்டும் அந்த வகை நோயால் 150 பேர் மாண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்