Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

போதைப்பொருளை உற்பத்தி செய்ய ஊக்குவித்ததாக ஜப்பானியப் பேராசிரியர் மீது சந்தேகம்

ஜப்பானியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தனது மாணவர்களை எக்ஸ்டஸி என்னும் போதைப்பொருளை உற்பத்தி செய்ய ஊக்குவித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -

ஜப்பானியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தனது மாணவர்களை எக்ஸ்டஸி என்னும் போதைப்பொருளை உற்பத்தி செய்ய ஊக்குவித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

61 வயதான அந்த மருந்தியல் பேராசிரியர் மேற்கு ஜப்பானிலுள்ள மாட்சுயாமா பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.

மருந்தியல் பற்றிய மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்துவதே தமது நோக்கம் என்று புலனாய்வு அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார்.

தயாரிக்கப்பட்ட போதைப்பொருள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அது அப்புறப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஜப்பானியச் சட்டத்தின்படி, கல்வி நோக்கத்திற்காக போதைப்பொருள் தயாரிக்க ஆய்வாளர்கள் அதிகாரிகளிடம் இருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்