Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நதியில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய பிரிட்டிஷ் அரசதந்திரி...குவியும் பாராட்டு

சீனாவின் சோங்சிங் (Chongqing) நகரில் நதியில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய பிரிட்டிஷ் அரசதந்திரிக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர் இணையவாசிகள்.

வாசிப்புநேரம் -

சீனாவின் சோங்சிங் (Chongqing) நகரில் நதியில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய பிரிட்டிஷ் அரசதந்திரிக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர் இணையவாசிகள்.

சம்பவத்தையொட்டி சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, அவருக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.

பிரிட்டிஷ் அரசதந்திரியான திரு. ஸ்டீஃபன் எல்லிஸன் (Stephen Ellison), கடந்த சனிக்கிழமை (நவம்பர் 14) அன்று நகரில் பயணம் மேற்கொண்டிருந்தபோது மக்கள் சிலர் கூச்சலிட்டதைக் கவனித்தார்.

பெண் ஒருவர் நதியில் விழுந்ததை அறிந்தவுடன், அவர் சற்றும் தயங்காமல் நதிக்குள் குதித்தார்.

நதியில் மிதப்பதற்குச் சிரமப்பட்ட பெண்ணைத் திரு. எல்லிஸன் காப்பாற்றினார்.

பிரிட்டன் தனது 5G தொலைத்தொடர்புக் கட்டமைப்பிலிருந்து சீனாவின் Huawei நிறுவனத்தைத் தடை செய்ததை அடுத்து இருநாட்டுக்கும் இடையே பூசல் ஏற்பட்டுள்ளது.

திரு. எல்லிஸன் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் 'ஹீரோவைப்' போன்று செயல்பட்டுள்ளார் என்று இணையவாசிகள் பாராட்டினர்.

அத்துடன் அவரின் செயல்களைப் பாராட்டி, பிரிட்டிஷ் அதிகாரிகள் பலரும் கருத்துரைத்துள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்