Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கொதிக்கும் சட்டிக்குள் உணவகக் காசாளர்

ஒரு பெரிய பாத்திரம் அனலின் மீது இருக்கிறது. அதனுள் உணவு ஏதும் இல்லை; அதற்குப் பதிலாக உணவகத்தின் காசாளர் பாத்திரத்தினுள் அமர்ந்துள்ளார்.

வாசிப்புநேரம் -
கொதிக்கும் சட்டிக்குள் உணவகக் காசாளர்

படம்: Twitter

ஒரு பெரிய பாத்திரம் அனலின் மீது இருக்கிறது. அதனுள் உணவு ஏதும் இல்லை; அதற்குப் பதிலாக உணவகத்தின் காசாளர் பாத்திரத்தினுள் அமர்ந்துள்ளார்.

பார்ப்பதற்கு 'அந்நியன்' திரைப்படக் காட்சியைப் போலவே இருக்கும் படம் ஹைதராபாத் உணவகம் ஒன்றில் எடுக்கப்பட்டது.

'தம்' பிரியாணியை விற்பனை செய்யும் உணவகம் அதன் பணம் செலுத்துமிடத்தை, ஊழியர்கள் பிரியாணிப் பாத்திரத்தில் இருப்பதைப் போல வடிவமைத்துள்ளது. அதனுடன் அனல் போலக் காட்சியளிக்க, பாத்திரத்தின் அடியில் விளக்குகள் போடப்பட்டுள்ளன.

படத்தைப் பதிவேற்றம் செய்த Twitter பயனீட்டளர், காசாளரைப் பாத்திரத்தில் இருப்பதைப் போலக் காண்பிப்பதால் பசி ஏற்படுவதில்லை என்றார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்