Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மார் நிலவரம் குறித்து ஆசியான் தலைவர்கள் சந்திப்பு நடத்துவதற்குப் புருணை ஆதரவு

மியன்மார் நிலவரம் குறித்து ஆசியான் தலைவர்கள் பேச்சு நடத்துவதற்குப் புருணை ஆதரவு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
மியன்மார் நிலவரம் குறித்து ஆசியான் தலைவர்கள் சந்திப்பு நடத்துவதற்குப் புருணை ஆதரவு

(படம்: AP)

மியன்மார் நிலவரம் குறித்து ஆசியான் தலைவர்கள் பேச்சு நடத்துவதற்குப் புருணை ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆசியான் அமைப்புக்குத் தலைமையேற்றுள்ள புருணை,
ஜக்கர்த்தாவில் சந்திப்புக்கான ஆயத்தங்களைச் செய்யும்படி அதிகாரிகளிடம் தெரிவித்திருப்பதாகக் கூறியது.

மியன்மாரில் பிப்ரவரி முதல் தேதியன்று ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டதிலிருந்து அங்குப் பதற்றநிலை நீடிக்கிறது.

அதற்குத் தீர்வுகாண, ஆசியான் உறுப்பினர்களிடையே பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் முயற்சிகளை இந்தோனேசியா வழிநடத்தியுள்ளது.

ஜக்கர்த்தாவில் நடக்கவிருக்கும் கூட்டத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும்படி அமைச்சர்களையும் மூத்த அதிகாரிகளையும் புருணையும் மலேசியாவும் விடுத்த கூட்டறிக்கை கேட்டுக்கொண்டது.

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசினும் புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவும் (Hassanal Bolkiah) நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து, அந்தக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

மியன்மாரில் அதிகரித்து வரும் இறப்புகள் குறித்துத் தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.

வன்முறையைக் கைவிடுமாறு அனைத்துத் தரப்பினரையும் அவர்கள் கேட்டுக்கொண்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

- REUTERS 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்