Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: காட்டில் தியானம் செய்த பௌத்தத் துறவியைக் கொன்ற சிறுத்தை

காட்டில் தியானம் செய்துகொண்டிருந்த பௌத்தத் துறவியைச் சிறுத்தை தாக்கிக்கொன்றது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

வாசிப்புநேரம் -
இந்தியா: காட்டில் தியானம் செய்த பௌத்தத் துறவியைக் கொன்ற சிறுத்தை

கோப்புப் படம்: AFP/Tauseef Mustafa

காட்டில் தியானம் செய்துகொண்டிருந்த பௌத்தத் துறவியைச் சிறுத்தை தாக்கிக்கொன்றது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

ராகுல் வால்கே என்னும் துறவி டடோபா காட்டில், மரத்தின் அடியில் தியானம் செய்துகொண்டிருக்கும்போது, சிறுத்தை தாக்கியதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். 

காட்டில் அமைந்துள்ள பௌத்த ஆலயத்தில் அவர் பணியாற்றினார். தியானம் செய்வதற்காக அவர் அமைதியான இடத்தைத் தேடி நெடுந்தூரம் காட்டுக்குள் சென்றிருக்கிறார்.

அப்படிச் செல்லவேண்டாம் என்று துறவிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக வன அதிகாரிகள் BBC செய்தி நிறுவனத்திடம் கூறினர்.  

துறவியைத் தாக்கிய சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 

மாண்ட துறவியின் குடும்பத்திற்கு சுமார் 17,000 வெள்ளி இழப்பீடாக  வழங்கப்படுகிறது.

டடோபா காட்டில் சுமார் 90 புலிகள் வாழ்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்