Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா, பங்களாதேஷைத் தாக்கியுள்ளது புல்புல் சூறாவளி

புல்புல் சூறாவளி இந்தியாவையும் தென் பங்களாதேஷ்யும் தாக்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியா, பங்களாதேஷைத் தாக்கியுள்ளது புல்புல் சூறாவளி

(படம்: AFP)


புல்புல் சூறாவளி இந்தியாவையும் தென் பங்களாதேஷ்யும் தாக்கியுள்ளது.

அதன் சீற்றத்தால் இருவர் மாண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோரை அந்த சூறாவளியின் பாதிப்பிலிருந்து தப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விமான நிலையங்களும் துறைமுகங்களும் மூடப்பட்டன.

கொல்கத்தாவில் மரம் சாய்ந்ததில் ஒருவர் மாண்டார் என்றும் சுவர் இடிந்து விழுந்ததில் மற்றொருவர் மாண்டர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் கரையோரப் பகுதிகளிலிருந்து சுமார் 60,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு 5,500 க்கும் மேற்பட்ட சூறாவளி முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் பேரிடர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்