Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உதவியின்றி வியாபாரத்தைப் பெருக்கும் உடற்குறையுள்ள இளையர்கள்

மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சுமார் 30 கிலோமீட்டர் தெற்கே உள்ள நகரொன்றில் சாலையோரமாக உணவகம் ஒன்றை நடத்திவருகின்றனர் இளையர்கள் இருவர். 

வாசிப்புநேரம் -

மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சுமார் 30 கிலோமீட்டர் தெற்கே உள்ள நகரொன்றில் சாலையோரமாக உணவகம் ஒன்றை நடத்திவருகின்றனர் இளையர்கள் இருவர்.

'பர்கர்' (Burger) விற்கும் இருவரும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள். வாய் பேச முடியாதவர்கள்.

வேண்டுமென்ற உணவைப் புத்தகம் ஒன்றில் எழுதுகின்றனர் வாடிக்கையாளர்கள்.

கடையை நடத்தும் 31 வயது ஃபாரிட் ஸைனுதின், 20 வயது இட்ஸாம் ஆசார் இருவரும் ஒரு காலத்தில் அடுத்த வேளை உணவை வாங்கப் பணமின்றிச் சிரமப்பட்டவர்கள்.

கடந்த ஆண்டு, இளம் தொழில்முனைவர்களுக்கான Arisprop நிறுவனத்தின் திட்டத்தில் இருவரும் பதிவுசெய்தனர் .

'நிதியுதவி கேட்காமல் வேலை கொடுக்குமாறு அவர்கள் கேட்டனர்'
என்றார் திட்டத்தை நடத்தும் திரு.நஜிப் அப்துல்லா.

உணவுக் கடையை நிறுவ உதவியதுடன் முதல் சில மாதங்களுக்கு அவர்களுக்குச் சம்பளமும் கொடுத்தார் திரு. நஜிப்.அவர்களுக்குத் தங்க இடமம் தரப்பட்டதோடு மோட்டார் சைக்கிளும் கொடுக்கப்பட்டது.

ஒரு சில மாதங்களில் வியாபாரம் சூடுபிடித்தவுடன் அவர்கள் எந்த உதவியுமின்றிச் செயல்படத் தொடங்கினர்.

வியாபாரம் வலுவாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதே பெரிய சிரமமாய் இருந்ததாக இருவரும் கூறினர். சில நேரங்களில் வேண்டிய உணவைச் சிலர் எழுதிக் கேட்பதற்குப் பதிலாக வாயை அசைத்துக் கூறமுயல்வர் என்றார் ஃபாரிட். அதனால் தொடர்புகொள்வதில் தொடக்கத்தில் சற்றுப் பிரச்சினை இருந்தது.

ஆனால் 'தாங்கள் உடற்குறையுள்ளவர்கள்' என்ற பதாகையைக் கடையில் வைத்த பிறகு வாடிக்கையாளர்கள் மெல்ல மெல்லப் புரிந்துகொள்ளத் தொடங்கியதாக இருவரும் CNAஇடம் தெரிவித்தனர்.

பெரும்பாலும் சாலையோரக் கடைகளில் விற்கப்படும் எண்ணெய் மிகுந்த பர்கருக்குப் பதிலாக சற்று ஆரோக்கியமான காய்கறி நிறைந்த பர்கரை அவர்கள் விற்பனை செய்துவருகின்றனர்.

இயற்கையான மூலப் பொருள்களைப் பயன்படுத்துவதால் பலர் தங்களை நாடுவதாகக் கூறுகின்றனர் தன்னம்பிக்கை கொண்ட இந்த ஆடவர்கள் இருவரும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்