Images
  • port dickson
    (படம்: AFP/MOHD RASFAN)

மலேசியாவின் போர்ட் டிக்சன் தொகுதியில் நாளை இடைத்தேர்தல்

மலேசியாவின் போர்ட் டிக்சன் தொகுதி மக்கள், நாளை இடைத்தேர்தலில் வாக்களிக்கவிருக்கின்றனர்.

அங்கு போட்டியிடும் மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெற்றி பெற்றால், அடுத்த பிரதமராகும் வாய்ப்பைப் பெறுவார்.

மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்க இணக்கம் கண்டபோது திரு. அன்வார் இப்ராஹிமிடம் நாளடைவில் பிரதமர் பொறுப்பை ஒப்படைக்கத் தற்போதையப் பிரதமர் மகாதீர் முகமது ஒப்புக்கொண்டார்.

அந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் திரு. அன்வார் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும்.

Top