Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அமெரிக்க முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 195 பேருக்குக் கிருமித்தொற்று இல்லை

தென் கலிஃபோர்னியா ராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 195 பேர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

வாசிப்புநேரம் -
அமெரிக்க முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 195 பேருக்குக் கிருமித்தொற்று இல்லை

(கோப்புப்படம்: AFP/Philip Fong)

தென் கலிஃபோர்னியா ராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 195 பேர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து அமெரிக்கா சென்ற அவர்கள் முன்னெச்சரிக்கையாக இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களில் எவருக்கும் கொரோனா கிருமித் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

அதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று முடிவுக்கு வந்தது.

அமெரிக்காவில் இதுவரை 13 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில் ஏழு பேர் கலிஃபோர்னியவைச் சேர்ந்தவர்கள்.

டெக்ஸஸ் (Texas),நெப்ரஸ்கா (Nebraska), கலிபோர்னியாவில் (California) ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் இன்னும் நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவருக்கு மட்டும் கிருமி தொற்றியிருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்