Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கம்போடியாவில் கண்ணிவெடி கண்டுபிடிக்கும் எலிக்குத் தங்கப் பதக்கம்; உயிர்காக்கும் சேவைக்கு அங்கீகாரம்

கம்போடியாவில் கண்ணிவெடி கண்டுபிடிக்கும் எலிக்குத் தங்கப் பதக்கம்; உயிர்காக்கும் சேவைக்கு அங்கீகாரம்

வாசிப்புநேரம் -
கம்போடியாவில் கண்ணிவெடி கண்டுபிடிக்கும் எலிக்குத் தங்கப் பதக்கம்; உயிர்காக்கும் சேவைக்கு அங்கீகாரம்

படம்: PDSA

39 கண்ணிவெடிகள். 28 வெடிக்காத வெடிகுண்டுகள்.

மகாவா (Magawa) என்று பெயரிடப்பட்டுள்ள எலி 7 ஆண்டுகளில் கண்டுபிடித்த வெடிகுண்டுகள் அவை.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெரிய ரக எலிகள் அவை. இயல்பாக வீடுகளிலும் வயல்களிலும் காணப்படும் எலிகள் அல்ல அவை.

கம்போடியாவில் அது செய்யும் உயிர்காக்கும் சேவையை அங்கீகரிக்கும் வகையில், பிரிட்டனைச் சேர்ந்த கால்நடைகளுக்கான அறநிறுவனம், மகாவாவிற்குத் தங்கப் பதக்கம் வழங்கியுள்ளது.

"விலங்குகளின் தைரியத்திற்காகவும் தனிச்சிறந்த கடமையுணர்ச்சிக்காகவும்" என்னும் வார்த்தைகள், அந்தப் பதக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

மகாவா போன்ற எலிகள் HeroRAT என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றன.

கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதற்காக அவற்றுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.

உலகெங்கும் சுமார் 80 மில்லியன் வெடிக்கக்கூடிய கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் PDSA அறநிறுவனம் தெரிவித்தது.

கம்போடியாவில் மட்டும் 4 முதல் 6 மில்லியன் கண்ணிவெடிகள் உள்ளன.

அவற்றுள் 3 மில்லியன் கண்ணிவெடிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கண்ணிவெடிகளால் சுமார் 64,000 பேர் அங்கு மாண்டுவிட்டனர்.

மகாவா எலி, எடை குறைவாக இருப்பதால், கண்ணிவெடிகள் இருக்கும் இடத்தை அதனால் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்க முடியும்.

அதற்காகவே மகாவா சிறு வயதிலிருந்தே பயிற்சி கொடுத்து வளர்க்கப்பட்டது.

மனிதர்கள் 4 நாள்கள் சோதிக்கும் இடத்தை, அது 30 நிமிடங்களிலேயே சோதித்துவிடும்.

கண்ணிவெடிச் சோதனைக் கருவிகளைக் கொண்டு மனிதர்கள் சோதனை நடத்தும்போது, கண்ணிவெடி மட்டுமல்லாது எல்லாவிதமான உலோகப் பொருள்களையும் அந்தக் கருவிகள் காட்டும்.

ஆனால், எலிகளோ வெடிமருந்து வாடையை மட்டும் இலக்காகக் கொண்டு செயல்படும்.

குறிப்பிட்ட பரப்பளவுக்குள் நடைபயிலும் இத்தகைய எலிகள், வெடிமருந்து வாடையை முகர்ந்ததும் தரையைப் பிராண்டத் தொடங்கும்.

உடனே அதை ஒரு கண்காணிப்பாளர் குறித்துக்கொண்டு எலிக்கு உணவு அளிப்பார்.

குறிப்பிட்ட இடத்திற்குக்கீழ் புதையுண்ட கண்ணிவெடி பின்னர் பாதுகாப்பாக அகற்றப்படும்.

மகாவா தொடர்ந்து கம்போடியாவில் சேவையாற்றும்.

PDSA தங்கப் பதக்கம் பெற்ற 30 விலங்குகளில் மகாவா மட்டுமே எலி. மற்றவை அனைத்தும் மோப்ப நாய்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்