Images
  • school - 1
    படம்: AFP/Tang Chhin Sothy

கம்போடியா: குப்பைகளைக் கட்டணமாக வசூலிக்கும் பள்ளி

மாணவர்களுக்குப் பாடங்களைப் போதிக்கும் பள்ளிகளில் வழக்கமாகப் பணம்தான் கட்டணமாக வசூலிக்கப்படும்.


கம்போடியாவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களிடமிருந்து குப்பைகள் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.

மாணவர்கள் கணினி, கணக்கு, மொழி ஆகிய பாடங்களை வகுப்பறையில் கற்றுக்கொள்கின்றனர். அதே நேரத்தில் கழிவுகளைக் குறைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் கற்றுக்கொள்வர்.

வீசப்பட்ட போத்தல் மூடிகளைப் பயன்படுத்தி பூந்தோன் என்ற மாணவர் தனது பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளார்.

Coconut School என்பது பள்ளியின் பெயர். பெரும்பாலும் மறுபயனீட்டுப் பொருட்களால் அந்தப் பள்ளி கட்டப்பட்டுள்ளது. பள்ளியில் சுமார் 65 மாணவர்கள் பயில்கின்றனர்.


வகுப்பறையின் சுவர்கள் கார் டயர்களைக் கொண்டு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.


Top