Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கம்போடியாவில் ஆளும் கட்சி வெற்றி - தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு

30 ஆண்டுக்கும் மேலாகக் கம்போடியாவின் பிரதமராக இருந்துவரும் திரு. ஹன் சென்னிற்குக் குறிப்பிடத்தக்க போட்டி கொடுக்கும் வகையில் எதிர்த்தரப்பு வேட்பாளர் இல்லாததை அவை சுட்டின.

வாசிப்புநேரம் -
கம்போடியாவில் ஆளும் கட்சி வெற்றி - தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு

(படம்:REUTERS/Samrang Pring)

கம்போடியாவில் சென்ற மாதம் நடந்த தேர்தலில், ஆளும் கம்போடிய மக்கள் கட்சி 125 நாடாளுமன்ற இடங்களையும் கைப்பற்றியிருப்பதாகத் தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தேர்தல் முடிவுகள் முறைகேடானவை என்று எதிர்த்தரப்பு குற்றஞ்சாட்டியது.

வாக்களிப்பு சுதந்திரமாகவோ, நியாயமானதாகவோ இடம்பெறவில்லை என்று உரிமைக் குழுக்கள் குரல்கொடுத்தன.

30 ஆண்டுக்கும் மேலாகக் கம்போடியாவின் பிரதமராக இருந்துவரும் திரு. ஹன் சென்னிற்குக் குறிப்பிடத்தக்க போட்டி கொடுக்கும் வகையில் எதிர்த்தரப்பு வேட்பாளர் இல்லாததை அவை சுட்டின.

சென்ற ஆண்டு கம்போடிய உச்ச நீதிமன்றம் முக்கிய எதிர்க்கட்சியான கம்போடிய தேசிய மீட்புக் கட்சியைக் கலைக்க உத்தரவிட்டது. அக்கட்சியின் சுமார் 120 உறுப்பினர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்டது.

கட்சித் தலைவர் கெம் சோக்கா (Kem Sokha) தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில் சென்ற செப்டம்பர் மாதம் சிறையிலடைக்கப்பட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்