Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்சுக்கு அனுப்பப்பட்ட குப்பைக் கொள்கலன்கள் குறித்து கனடியப் பிரதமர் பேச்சுவார்த்தை

பிலிப்பீன்சுக்கு அனுப்பப்பட்ட குப்பைக் கொள்கலன்கள் தொடர்பில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை தொடருவதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்சுக்கு அனுப்பப்பட்ட குப்பைக் கொள்கலன்கள் குறித்து கனடியப் பிரதமர் பேச்சுவார்த்தை

படம்: REUTERS

பிலிப்பீன்சுக்கு அனுப்பப்பட்ட குப்பைக் கொள்கலன்கள் தொடர்பில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை தொடருவதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மறுபயனீட்டுக்கு உகந்த பிளாஸ்டிக் கழிவுகள் என்று பொய்யாகக் குறிப்பிடப்பட்ட வீட்டுக் கழிவுப் பொருட்கள் சுமார் 100 கொள்கலன்களில் அடைக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவிலிருந்து பிலிப்பீன்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவற்றை மீட்டுக்கொள்ள இம்மாதம் 15 ஆம் தேதி வரை கனடாவுக்கு, பிலிப்பீன்ஸ் கால அவகாசம் வழங்கியிருந்தது.

அதை நிறைவேற்றத் தவறியதால், நேற்று, கனடாவுக்கான தனது தூதர்களை பிலிப்பீன்ஸ் மீட்டுக் கொண்டது.

கழிவுப் பொருள் கொள்கலன் சர்ச்சை தொடர்பில் கடந்த சில மாதங்களாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், விரைவில் நல்ல முடிவு கிட்டும் என்றும் கனடியப் பிரதமர் ட்ரூடோ கூறினார்.

இந்த விவாகரத்தில் கனடாவுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்யத் தயார் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டார்ட்டே சென்ற மாதம் அறிவித்திருந்தார்.

சுற்றுச் சூழலைப் பேணுவதன் தொடர்பிலான அனைத்துலக ஒப்பந்தங்களை மதித்து நடப்பதில் கனடாவின் நற்பெயர் குறித்துக் கேள்வி எழுந்துள்ளதாக பசுமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்