Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கனடா:டொரொன்டோவில் அகதிகளுக்கு அவசரகால மாற்றுத் திட்டத்தின்கீழ் அடைக்கலம்

கனடாவில் அடைக்கலம் நாடிச் செல்லும் அகதிகளுக்கு அவசரகாலத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றுத் திட்டத்தின்கீழ் டொரான்டோவில் (TORONTO) முகாம்கள் அமைத்துக் கொடுக்கப்படும் எனக் கனடா அறிக்கை வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கனடா:டொரொன்டோவில் அகதிகளுக்கு அவசரகால மாற்றுத் திட்டத்தின்கீழ் அடைக்கலம்

கோப்புப் படம்: AFP

கனடாவில் அடைக்கலம் நாடிச் செல்லும் அகதிகளுக்கு அவசரகாலத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றுத் திட்டத்தின்கீழ் டொரான்டோவில் (TORONTO) முகாம்கள் அமைத்துக் கொடுக்கப்படும் எனக் கனடா அறிக்கை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் கோடைக்காலத்தில் கனடாவை நோக்கி அதிகளவில் அகதிகள் வரக்கூடும் என்றும், அப்போது அந்த நெருக்கடிகளை சமாளிக்க அந்தத் திட்டம் உதவும் என அந்த அறிக்கைக் குறிப்பிட்டது.

டொரொன்டோவில் உள்ள கல்லூரி விடுதியில் 800 பேரைத் தங்க வைக்கவிருப்பதாகவும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் சமூக நிலையங்களில் தங்க வைக்கப்போவதாகவும் அது தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றபின் 27,000க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கலம் நாடி அமெரிக்காவில் இருந்து கனடாவுக்குச் சென்றுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாகக் கனடாவிற்குள் நுழைபவர்களை இருதரப்பு ஒப்பந்தத்தின்கீழ் அது திருப்பி அனுப்பியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்