Images
  • zipline
    படம்: Facebook/Flight Of The Gibbon

தாய்லந்து: சாகச விளையாட்டில் ஏற்பட்ட விபத்தால் கனடிய ஆடவர் பலி

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தாய்லந்தின் சியாங் மாய் நகரில் Zipline எனும் சாகச விளையாட்டில் ஈடுபட்ட 25 வயது கனடிய ஆடவர் பாதுகாப்புக் கொக்கி உடைந்து கீழே விழுந்து மாண்டார்.

அவர் கிட்டத்தட்ட 50 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்ததாகத் தாய்லந்து ஊடகங்கள் குறிப்பிட்டன.

Zipline விளையாட்டைத் தொடங்கிக் கொஞ்ச தூரம் சென்றதும் ஆடவரின் பாதுகாப்புக் கொக்கி உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Zipline விளையாட்டிற்கு 8 பாதுகாப்புக் கம்பிவடங்கள் இருக்க வேண்டும். ஆனால் அந்த இடத்தில் 3 பாதுகாப்புக் கம்பிவடங்கள் மட்டுமே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

விளையாட்டு ஏற்பாட்டாளர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Top