Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காரில் தெரியாமல் கீறல்கள் ஏற்படுத்திய ஓட்டுநர் - வித்தியாசமான முறையில் மன்னிப்பு

கார் நிறுத்தும் இடங்களில் சில நேரம் நமக்குத் தெரியாமலேயே பக்கத்தில் இருக்கும் கார்கள் மீது கீறல்களை ஏற்படுத்தி விடுவோம்.

வாசிப்புநேரம் -
காரில் தெரியாமல் கீறல்கள் ஏற்படுத்திய ஓட்டுநர் - வித்தியாசமான முறையில் மன்னிப்பு

(படம்: Facebook/Hir Niezam Nasihin)

கார் நிறுத்தும் இடங்களில் சில நேரம் நமக்குத் தெரியாமலேயே பக்கத்தில் இருக்கும் கார்கள் மீது கீறல்களை ஏற்படுத்தி விடுவோம்.

பிரச்சினை ஏதும் நேராமல் இருக்க அதைச் சிலர் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து ஓட்டம் பிடிப்பர்.

ஆனால் காரில் கீறல்கள் இருப்பதைக் கண்டால் காரின் உரிமையாளருக்கு அதிர்ச்சியாக இருக்கும்.

மலேசியாவில் அதேபோல் கார் நிறுத்தும் இடத்தில் ஆடவர் ஒருவர் சாலையில் இருந்த காரின் மீது தெரியாமல் கீறல்களை ஏற்படுத்திவிட்டார்.

அதன் பிறகு அவர் காரின் உரிமையாளருக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதி, 32 வெள்ளி ரொக்கத்தையும் விட்டுச் சென்றார்.

அந்தக் கடிதத்தைக் கண்ட காரின் உரிமையாளர் அதைத் தம்முடைய Facebook பக்கத்தில் பகிர்ந்தார்.

அந்தப் பதிவை சுமார் 6,000 பேர் பகிர்ந்தனர்.

காரில் கீறல் ஏற்படக் காரணமான ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டி பலரும் அவரைப் புகழ்ந்துள்ளனர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்