Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காசு மூட்டையோடு கார் வாங்கச் சென்றச் சீன மாது

சீனாவில் புதிய கார்களை விற்பனை செய்யும் நிறுவனத்திற்குச் சென்றார் மாது ஒருவர்.

வாசிப்புநேரம் -
காசு மூட்டையோடு கார் வாங்கச் சென்றச் சீன மாது

படம்: PIXABAY

சீனாவில் புதிய கார்களை விற்பனை செய்யும் நிறுவனத்திற்குச் சென்றார் மாது ஒருவர்.

புத்தம் புதிய Volkswagen Passat ரகக் காரை வாங்க விரும்பினார் அவர். அதன் விலை சுமார் 27,000 வெள்ளி.

மாது தொகையைக் கட்டத் தயார் என்றார். அவர் உடனே ஒரு பையைப் பிரித்திருக்கிறார்....ஊழியர்கள் வாயடைத்துப் போயினர். காரணம் 66 மூட்டைகளில் நாணயங்களை அவர் கொண்டு வந்திருந்தார்.

முழு மூச்சோடு அவற்றைக் கையால் எண்ணும் பணியில் இறங்கியது 17 ஊழியர்களைக் கொண்ட குழு.

மூட்டைகளை எண்ணி முடித்த பிறகு கொஞ்சம் காசு குறைவதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

எஞ்சிய தொகையை அந்தப் பெண் இணையம் வழி செலுத்தி காரைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டது.

அவர் ஏன் அப்படிச் செய்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்