Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உணவு பரிமாறும் பெண்ணுக்குக் கார் வாங்கிக்கொடுத்த தம்பதி

அமெரிக்கா: உணவகத்தில் சாப்பிடும்போது உணவு பரிமாறும் பெண் நல்ல சேவை வழங்கினால் பெரும்பாலானோர் கொஞ்சம் கூடுதல் பணம் வைப்பார்கள்.

வாசிப்புநேரம் -
உணவு பரிமாறும் பெண்ணுக்குக் கார் வாங்கிக்கொடுத்த தம்பதி

படம்: PIXABAY

அமெரிக்கா: உணவகத்தில் சாப்பிடும்போது உணவு பரிமாறும் பெண் நல்ல சேவை வழங்கினால் பெரும்பாலானோர் கொஞ்சம் கூடுதல் பணம் வைப்பார்கள்.

ஆனால் டெக்சஸ் உணவகத்தில் பணிபுரியும் இந்தப் பெண்ணுக்குக் கிடைத்ததோ ஒரு கார்.

NDTV தகவல்படி, எட்ரியானா எட்வர்ட்ஸ் (Adrianna Edwards) Denny's எனும் அமெரிக்க உணவகத்தில் பணிபுரிந்துவருகிறார்.

ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்ல அவர் 22.5 கிலோமீட்டர் தொலைவு நடக்கவேண்டும்.

உணவகத்தில் சாப்பிட வந்த தம்பதி எட்வர்ட்ஸின் கதையைக் கேட்டனர்.

சில மணி நேரம் காணமல்போன அவர்கள் 2011 Nissan Sentra காருடன் மீண்டும் உணவகத்திற்குத் திரும்பினர் என்று NDTV கூறியது.

புரோட்வே ஸ்ட்ரீட்டிலுள்ள (Broadway Street) கடை ஒன்றில் காரை வாங்கியிருக்கிறார்கள் அவர்கள்.

காரைக் கண்ட எட்வர்ட்ஸுக்குக் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

இனி 5 மணி நேரம் நடந்து வேலைக்கு வரத் தேவையில்லை எட்வர்ட்ஸ்.

30 நிமிடங்கள் போதும்.

காருக்கு எந்தக் கைமாறும் வேண்டாம் என்றுள்ளனர் தம்பதி.

என்றாவது ஒரு நாள் வேறு ஒருவருக்கு உதவி தேவைப்பட்டால் அதைச் செய்தால் போதும் என்றனர் அவர்கள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்