Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Instagramஇல் வாடகைக்கார் விற்பனைக்கு! எப்படி?

வாடகைக்கு விடப்பட்ட கார் சமூக ஊடகத்தில் விற்பனைக்கு விளம்பரப்படுத்தப்பட்டிருந்தால் அதிர்ச்சியாகத் தானே இருக்கும்!

வாசிப்புநேரம் -

வாடகைக்கு விடப்பட்ட கார் சமூக ஊடகத்தில் விற்பனைக்கு விளம்பரப்படுத்தப்பட்டிருந்தால் அதிர்ச்சியாகத் தானே இருக்கும்!

மலேசியாவின் குவந்தான் மாநிலத்தில் தமது Volkswagen Golf ரகக் காரைச் சக ஊழியரிடம் வாடகைக்கு விட்டார் 35 வயதுப்பெண்.

அதற்கான மாத வாடகை 1,100 ரிங்கிட் என்று பேசப்பட்டிருந்தது.

காரை வாடகைக்கு எடுத்தவர் அதன் உரிமையாளர் போன்று இணையத்தில் தம்மை அடையாளங்காட்டியிருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், கார் 23,000 ரிங்கிட்டுக்கு விற்பனைக்கு விடப்படுவதாக சமூக ஊடகத்தில் விளம்பரப்படுத்தியிருக்கிறார்.

உண்மையான உரிமையாளர் அந்த விவகாரம் குறித்து சக ஊழியரிடம் வினவியபோது "இழப்பீடாக 23,000 ரிங்கிட்டைக் கொடு, இல்லையென்றால் காரை எரித்துவிடுவேன்" என்று மிரட்டியிருக்கிறார்.

சம்பவம் குறித்து நேற்று முன்தினம் (11 டிசம்பர்) காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்