Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவின் நிலக்கரிச் சுரங்கத்தில் carbon monoxide கசிவு - 17 பேர் சிக்கியுள்ளனர்

தென்மேற்குச் சீனாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் carbon monoxide கசிவு ஏற்பட்டதில் 17 ஊழியர்கள் அதில் சிக்கியுள்ளதாக அவ்வட்டார அர்சாங்கம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

தென்மேற்குச் சீனாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் carbon monoxide கசிவு ஏற்பட்டதில் 17 ஊழியர்கள் அதில் சிக்கியுள்ளதாக அவ்வட்டார அர்சாங்கம் தெரிவித்துள்ளது.

சுரங்கத்தில் மூண்ட தீயின் காரணமாக அபாயகரமான அளவில் carbon monoxide சுரங்கத்தினுள் கசிவதாகத் தெரிவிக்கப்பட்டது.
100க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக வட்டார அரசாங்கம் சமூக ஊடகத்தில் பதிவுசெய்தது.

அரசாங்கத்தின் Chongqing Energy எரிசக்தி நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கம் அது.

சீனாவில் நிலக்கரிச் சுரங்கங்களில் விபத்துகள் ஏற்படுவது வழக்கம். குறைவான பாதுகாப்பு நடைமுறைகள் அதற்கு ஒரு காரணம்.

கடந்த ஈராண்டுகளில் 42 சுரங்க ஊழியர்கள் விபத்துகளில் மாண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்