Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சர்ச்சைக்கிடையே ஜப்பான் பேரரசரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளும் ஹாங்காங் தலைமை நிர்வாகி

ஜப்பான் பேரரசரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ள தோக்கியோ சென்றுள்ளார் ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம்.

வாசிப்புநேரம் -
சர்ச்சைக்கிடையே ஜப்பான் பேரரசரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளும் ஹாங்காங் தலைமை நிர்வாகி

படம்: REUTERS/Bobby Yip


ஜப்பான் பேரரசரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ள தோக்கியோ சென்றுள்ளார் ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி
கேரி லாம்.

கடந்த வார இறுதியில் ஹாங்காங்கில் மூண்ட கடுமையான வன்முறைச் சம்பவங்களுக்குப் பின் அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ள திருவாட்டி லாமுக்கு வழங்கப்பட்டிருந்த அழைப்பைத் திரும்பப் பெறும்படி ஜப்பானிய அரசாங்கத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கோரிக்கை மனுவில் சுமார் 60,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

திருவாட்டி லாம் கலந்துகொள்வதை அனைத்துலக ஊடகங்கள் எதிர்ப்பதுடன், அந்த நிகழ்வைப் பற்றிய எதிர்மறையான செய்தியை அவை வெளியிடக்கூடும் என்பதை கோரிக்கை மனு சுட்டியது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்