Images
  • Carrie lam1
     படம்:  REUTERS/Bobby Yip

சீனாவின் உத்தேச தேசியப் பாதுகாப்புச் சட்டத்தால் ஹாங்காங்கின் நீதித்துறைச் சுதந்திரம் பாதிக்கப்படமாட்டாது: தலைமை நிர்வாகி கேரி லாம்

ஹாங்காங்கில், சீனா அறிமுகம் செய்யத் திட்டமிடும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தால், அதன் நீதித்துறைச் சுதந்திரம் பாதிக்கப்படமாட்டாது என, ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்துள்ளார்.

அந்தச் சட்டத்தின் தொடர்பில் ஹாங்காங், பெய்ச்சிங்குடன் முழுமையாக ஒத்துழைக்கும் என்று அவர் சொன்னார்.

சீனாவின் நாடாளுமன்ற ஆண்டுக் கூட்டத்தில் இன்று அந்தச் சட்டத்துக்கான நகல் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஹாங்காங் அரசாங்கம், விரைவில் அந்த மசோதா தொடர்பான சட்ட நடைமுறைகளை முடிக்கும் என்று திருமதி லாம் தெரிவித்தார்.

அந்தப் புதிய சட்டத்தால், ஹாங்காங் வாசிகள் தற்போது அனுபவிக்கும் சட்டரீதியான உரிமைகளும் சுதந்திரமும் பாதிக்கப்படமாட்டா என்று அவர் சொன்னார்.

தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் நடவடிக்கைகளை ஒடுக்குவதுதான் பெய்ச்சிங்கின் நோக்கம் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

பயங்கரவாதச் செயல்களுக்கு ஏற்பாடு செய்தல், ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுதல் ஆகியவற்றைத் துடைத்தொழிக்க பெய்ச்சிங் விரும்புவதாகவும் திருமதி லாம் தெரிவித்தார்.  

Top