Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் பண மழை - சந்தேக நபர் கைது

கட்டத்திலிருந்து பணத்தைக்  கொட்டியதாக நம்பப்படும் ஆடவரை ஹாங்காங் காவல்துறை கைதுசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கில் பண மழை - சந்தேக நபர் கைது

(படங்கள்: Facebook)

ஹாங்காங்: கட்டத்திலிருந்து பணத்தைக் கொட்டியதாக நம்பப்படும் ஆடவரை ஹாங்காங் காவல்துறை கைதுசெய்துள்ளது.

24 வயது வோங் சிங் கிட் - தாம் கைது செய்யப்படுவதை Facebook வழியாக நேரடி ஒளிபரப்பு செய்தார்.

ஷாம் ஷுவி போ வட்டாரத்தில் சொகுசுக் காரில் இன்று பிற்பகல் வந்திறங்கிய வோங், கையில் கட்டுக் கட்டாக 500 ஹாங்காங் டாலர் நோட்டுக் கட்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று (டிசம்பர் 15) அதே பகுதியில் கட்டடத்திலிருந்து கொட்டப்பட்ட 100 ஹாங்காங் டாலர் நோட்டுகள் சாலைகளில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது நேரடி ஒளிப்பரப்புச் செய்த வோங், "ஆகாயத்திலிருந்து பணம் கொட்டுகிறது என்று கூறினால் நம்புவீர்களா?" என்று கூறினார்.

பணக்காரர்களிமிருந்து திருடி ஏழைகளுக்கு உதவ விரும்புவதாக Facebook பதிவில் குறிப்பிட்டார் அவர்.

Epoch Cryptocurrency எனும் Facebook பக்கத்தையும் Coin's Group எனும் மின்னிலக்க நாணய குழுமத்தையும் நடத்தி வருகிறார் வோங்.

பொது இடத்தில் ஒழுக்கமில்லாமல் நடந்து கொண்டதன் தொடர்பில் கைது செய்யப்பட்டார் வோங். சாலைகளில் கொட்டப்பட்ட பணத்தில் இதுவரை சுமார் 6,000 ஹாங்காங் டாலைரை இதுவரை காவல்துறை மீட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்