Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Cathay Pacific விமான நிறுவனத்தின் வருவாய் மீண்டும் அதிகரித்துள்ளது

ஹாங்காங்கின் Cathay Pacific விமான நிறுவனத்தின் வருவாய் மீண்டும் அதிகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
Cathay Pacific விமான நிறுவனத்தின் வருவாய் மீண்டும் அதிகரித்துள்ளது

(படம்: AFP PHOTO/LAURENT FIEVET)

ஹாங்காங்கின் Cathay Pacific விமான நிறுவனத்தின் வருவாய் மீண்டும் அதிகரித்துள்ளது.

விமானச் சேவைகளின் விலையை குறைக்க திட்டமிட்டதன் மூலம் அதன் வருவாய் கூடியுள்ளது.

Cathay Pacific நிறுவனத்தின் கடந்த ஆண்டுக்கான வருடாந்தர மதிப்பு 290 மில்லியன் டாலரைத் தாண்டியது.

சீனா, வளைகுடா நாடுகளின் விமான நிறுவனங்களுடன் Cathay Pacific கடந்த ஈராண்டுகளாக போட்டியிட்டு வருகிறது.

விமானப் பயணிகளுக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதும், மேம்பட்ட வருவாய் நிர்வாகமும் Cathay Pacific நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கச் செய்தன.

Cathay Pacific நிறுவனம் அதன் சரக்கு விமானச் சேவைகளை முன்னிலைப்படுத்தி அதன் கால்பகுதி வருவாயை ஈட்டி வந்தது.

வருவாய் அதிகரித்ததற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்ததாக நிறுவனம் கூறிற்று.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்