Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மீண்டும் விமானப் பயணச் சீட்டுகளை தவறான விலைக்கு விற்ற Cathay Pacific

Cathay Pacific விமான நிறுவனம், மீண்டும் தமது விமானப் பயணச் சீட்டுகளை தவறான விலைக்கு விற்றுள்ளது.

வாசிப்புநேரம் -
மீண்டும் விமானப் பயணச் சீட்டுகளை தவறான விலைக்கு விற்ற Cathay Pacific

(படம்: Anthony Wallace | AFP)

Cathay Pacific விமான நிறுவனம், மீண்டும் விமானப் பயணச் சீட்டுகளை தவறான விலைக்கு விற்றுள்ளது.

அதன்படி, போர்ச்சுகல் நகரிலிருந்து ஹாங் காங்கிற்கு செல்லும் Cathay Pacific விமான சேவையின், முதல் வகுப்புப் பயணச் சீட்டுகள், 1,500 டாலருக்கு விற்கப்பட்டுள்ளன. வழக்கமாக, அத்தகைய நுழைவுச்சீட்டுகள், 16 ,000 டாலருக்கு, அதாவது, பத்து மடங்கு அதிக விலைக்கு விற்கப்படும்.

கடந்து இரண்டு வாரங்களில், அத்தகைய தவறு நடப்பது இது இரண்டாவது முறை.

முன்னதாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் உரிய விமான சேவைகளில், முதல் வகுப்புப் பயணச்சீட்டுகள், சாதாரண பிரிவுப் பயணச்சீட்டுகளுக்குரிய விலைகளில் விற்கப்பட்டன.

அத்தகைய விலைக் கழிவுகள், நிறுவனத்தின் தவற்றால் வழங்கப்பட்டதாகவும், நிறுவனம், அந்த விற்பனையை அங்கீகரிப்பதாகவும், முன்னர் கூறியிருந்தது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்