Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: சந்திரயான்-2 நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைவு

இந்தியா விண்வெளிக்கு அனுப்பிய சந்திரயான்-2 என்னும் விண்கலம், நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
இந்தியா: சந்திரயான்-2 நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைவு

(படம்: AFP/Arun Sankar)

இந்தியா விண்வெளிக்கு அனுப்பிய சந்திரயான்-2 என்னும் விண்கலம், நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்திருக்கிறது.

கடந்த நான்கு வாரங்களாக விண்வெளியில் பயணம் செய்து, திட்டமிட்டபடி அந்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.

அது இப்போது 88 டிகிரி சாய்மானத்தில், நிலவைச் சுற்றிவரத் தொடங்கியுள்ளது.

ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், அதனைத் தெரிவித்தது.

சரியான வேகத்திலும் உயரத்திலும் விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. மிகச் சிறிய தவறு நேர்ந்தாலும், ஒட்டுமொத்த ஆய்வுத் திட்டமும் வீணாகிவிடுமென இஸ்ரோவின் தலைவர் திரு. சிவன் குறிப்பிட்டார்.

இனிவரும் நாள்களிலும் திட்டமிட்டபடி விண்கலம் பயணம் செய்தால் அது, அடுத்த மாதம் 7ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும்.

நிலவில் இறங்கி ஆய்வுகளை நடத்தவுள்ள பிராக்யான் (Pragyan) என்னும் ஆய்வு வண்டியையும், விக்ரம் (Vikram) என்னும் ஆய்வுக் கலத்தையும் விண்கலம் ஏந்திச் செல்கிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்