Images
  • Chandrayaan 2
    (படம்: AFP)

நிலவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலம்

இந்தியா விண்ணுக்கு அனுப்பியுள்ள சந்திரயான்-2 விண்கலம், பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து விலகி, நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறது.

ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் அதனைத் தெரிவித்தது.

சந்திரயான்-2 விண்கலம், இன்று அதிகாலையில், பூமியிலிருந்து சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிலவின் பாதையில் செலுத்தப்பட்டதாக ஆய்வு நிலையம் குறிப்பிட்டது.

7 நாள் பயணத்துக்குப் பிறகு, இம்மாதம் 20ஆம் தேதி அது நிலவின் சுற்றுப்பாதையைச் சென்றடையும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

சந்திரயான்-2 விண்கலத்தில், விக்ரம் (Vikram) என்னும் ஆய்வுக் கலமும், பிரக்யான் (Pragyan) என்னும் ஆய்வு வண்டியும் உள்ளன.

நிலவின் மேற்பரப்பில் ஆய்வுக்கலத்தை இறக்கி ஆய்வு நடத்த, இந்தியா மேற்கொண்டுள்ள முதல் முயற்சி இது.

அடுத்த மாதம் 7ஆம் தேதி, ஆய்வு வண்டியை உள்ளடக்கிய ஆய்வுக் கலம், நிலவில் தரையிறங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
 

Top