Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நிலவுக்குச் செல்லும் இந்திய விண்கலம்

நிலவுக்கு விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேரவுள்ளது.

வாசிப்புநேரம் -
நிலவுக்குச் செல்லும் இந்திய விண்கலம்

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

நிலவுக்கு விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேரவுள்ளது.

10 ஆண்டுகளாக உருவெடுத்துவரும் சந்திரயான்-2 விண்கலம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து திங்கட்கிழமை (ஜூலை 15)புறப்படவுள்ளது.

50 ஆண்டுக்குமுன் நிலவில் மனிதன் கால்பதித்ததிலிருந்து விண்வெளி ஆராய்ச்சி எப்படி முன்னேறியுள்ளது என்பதைக் காட்ட முனைகிறது இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் திட்டம்.

விண்கலம் சுமார் 384,400 கிலோமீட்டர் பயணம் செய்யும். அதற்காகும் செலவு சுமார் 140 மில்லியன் டாலர்.

சந்திரயான்-2 சுமார் 14 நாள்கள் நிலவில் இயங்கும். நிலவில் நீருக்கான அறிகுறிகளைக் கண்டுபிடிப்பதுடன் சூரியக் குடும்பத்தின் பழங்காலப் படிவங்களைக் கண்டுபிடிக்கவும் விண்கலம் முனையும்.

சந்திரயான்-2 நிலவில் செப்டம்பர் 6ஆம் தேதி தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சந்திரயான்-2 நிலவுக்குச் செல்கிறது.

அது வெற்றிகரமாக நடந்துமுடிந்தால் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடிக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்