Images
  • Hk airport
    படம்: REUTERS

ஹாங்காங் விமான நிலையத்தில் பயணப் பதிவு தற்காலிக நிறுத்தம்

ஹாங்காங்கிலிருந்து வெளியிடங்களுக்குப் பயணம் செய்வோருக்கான பயணப் பதிவுச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது நாளாக இன்று புறப்பாட்டுப் பகுதியை மறித்ததையடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டதையடுத்து, முனையத்தின் செயல்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாய் நிலையத்தின் அறிக்கை தெரிவித்தது.

மாலை நாலரை மணியிலிருந்து அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானச் சேவைகளுக்குமான பயணப் பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

புறப்பாட்டு நடைமுறைகளை முடிக்காமல் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்துதரும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என்றும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.


 

Top