Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: சென்னையில் இருந்து 181 டன் Ammonium nitrate ஹைதராபாத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது

இந்தியா: சென்னையில் இருந்து 181 டன் Ammonium nitrate ஹைதராபாத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது 

வாசிப்புநேரம் -
இந்தியா: சென்னையில் இருந்து 181 டன் Ammonium nitrate ஹைதராபாத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது

(படம்: Pixabay)

இந்தியாவின் சென்னை நகரில் இருந்து 181 டன்
Ammonium nitrate ரசாயனம் ஹைதராபாத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

10 பெரிய கொள்கலன்கள் மூலம் அவை ஹைதராபாத்தில் உள்ள ஒரு வர்த்தகருக்கு அனுப்பப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் 12 கட்டப் பாதுகாப்பு நிபந்தனைகளின்கீழ் அந்த Ammonium nitrate இடம் மாற்றப்பட்டது.

இன்னும் 561 டன் Ammonium nitrate 27 பெரிய கொள்கலன்களில் சென்னையில் வைக்கப்பட்டுள்ளன.

அவை இன்னும் ஒரு வாரத்திற்குள் இடமாற்றம் செய்யப்படும் என்று Times of India நாளேட்டிடம் அதிகாரிகள் கூறினர்.

அண்மையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் Ammonium nitrate ஏற்படுத்திய வெடிப்புச் சம்பவத்தால் கடுமையான சேதம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, சென்னை துறைமுகம் அருகே வைக்கப்பட்டுள்ள 740 டன் Ammonium nitrate மீது கவனம் திரும்பியது.

2015ஆம் ஆண்டு Ammonium nitrate-ஐ இறக்குமதி செய்த நிறுவனத்திடம் அதை வாங்குவதற்கான சட்டரீதியான உரிமம் இல்லாததால், அது பறிமுதல் செய்யப்பட்டு மணலி எனும் இடத்தில் வைக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்