Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சென்னை : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலவச ரயில் பயணம்

தமிழகத் தலைநகர் சென்னையின் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியக்கக் கட்டண நுழைவாயில்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகப் பயணிகள் இன்று காலை இலவசமாகப் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றனர்.

வாசிப்புநேரம் -

தமிழகத் தலைநகர் சென்னையின் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியக்கக் கட்டண நுழைவாயில்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகப் பயணிகள் இன்று காலை இலவசமாகப் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றனர்.

பயணிகளின் பலபயன் கட்டண அட்டைகளைச் சரிபார்த்து உள்ளே அனுமதிக்கும் தானியக்க நுழைவாயில்களில் இன்று காலை 6 மணிக்குக் கோளாறு ஏற்பட்டது.

எனினும் ரயில் சேவைகளுக்குப் பாதிப்பில்லை.

சென்னை மெட்ரோ ரயில் பாதையில் உள்ள 32 நிலையங்களிலும் ஏற்பட்ட கோளாற்றினால் பயணிகள் நிலையங்களுக்குள் செல்லவோ அங்கிருந்து வெளியேறவோ இயலவில்லை.

இதன் காரணமாக ஊழியர்கள் முதல் முறையாகக் காகித நுழைவுச் சீட்டுகளை வழங்கத் தொடங்கினர். ஆனால், பிறகு பயணிகள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை சுமார் 11 மணி வரை அது நீடித்தது.

கடந்த சில மாதங்களாக, பல நிலையங்களின் தானியக்கக் கட்டண நுழைவாயில்களில் சில சிறிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்