Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தண்ணீருக்காக வழி மீது விழி வைத்துக் காத்திருக்கும் சென்னைவாசிகள்

சென்னையில் ஒன்று குறைவான மழை பெய்கிறது. இல்லையென்றால், ஒரே நேரத்தில் அதிக மழைபெய்து வெள்ளத்தை ஏற்படுத்துகிறது.

வாசிப்புநேரம் -
தண்ணீருக்காக வழி மீது விழி வைத்துக் காத்திருக்கும் சென்னைவாசிகள்

(படம்: Reuters)

(வாசிப்பு நேரம்: 2 நிமிடத்திற்குள்)

சென்னையில் ஒன்று குறைவான மழை பெய்கிறது. இல்லையென்றால், ஒரே நேரத்தில் அதிக மழைபெய்து வெள்ளத்தை ஏற்படுத்துகிறது.

இரண்டு சந்தர்ப்பங்களிலுமே, போதுமான தண்ணீர் கிடைக்காமற்போகிறது.

சென்னைக்குக் குடிநீர் விநியோகிக்கும் ஏரிகளும் நீர்த் தேக்கங்களும் முறையாகத் தூர் வாரப்படாமலும் பராமரிக்கப்படாமலும் போவதால், அவற்றால் அதிகமான தண்ணீரைச் சேகரித்து வைக்க முடிவதில்லை என்று குறைகூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாததால், சென்னைக்குத் தண்ணீர் விநியோகிக்கும் 4 நீர்த்தேக்கங்களும் வறண்டு கிடக்கின்றன.

அதனால், சுமார் 10 மில்லியன் மக்களைக் கொண்ட சென்னை நகரம் தண்ணீர்ப் பஞ்சத்தால் அவதிப்படுகிறது.

நிலத்தடி நீர்மட்டம் ஏற்கனவே அதலபாதாளத்துக்குச் சென்றுகொண்டுள்ளது.

நிலத்தடி நீர் மிதமிஞ்சிய அளவிற்கு உறிஞ்சப்படுவது அதற்குக் காரணம்.

தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் கோடைக்காலத்தில், குடியிருப்பாளர்களுக்குத் தேவையான தண்ணீரை விநியோகிக்க, மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

அண்மையில், ஜோலார்பேட்டையிலிருந்து தினமும் 4 முறை, ரயிலில் தண்ணீர் கொண்டுவரும் திட்டம் அறிமுகமானது.

கடல் நீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்துக்கு அதிகச் செலவாகிறது.

சென்னைக்குத் தினமும் 15,000 லாரிகளில், வெளிப்புற கிராமங்களிலிருந்து தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது.

குடியிருப்பாளர்கள், பிளாஸ்டிக் குடங்களோடு தண்ணீர் லாரிகளுக்காகச் சாலைகளில் காத்துக் கிடக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பருவநிலை மாற்றம் காரணமாக, நகரத்தின் வெப்பநிலையும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிகரித்துள்ளது.

கோடைக்காலம் முடிந்துவிட்டாலும்கூட அங்கே வெப்பநிலை குறைந்தபாடில்லை.

1950க்குப் பிந்திய வெப்பநிலையோடு ஒப்பிடும்போது, சென்னையின் சராசரி வெப்பநிலை இப்போது 1.3 டிகிரி செல்சியஸ் கூடியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அதுவும் தண்ணீர்ப் பிரச்சினையைக் கடுமையாக்கியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்