Images
  • Chew boy hit
    படம்: Screengrab/Facebook 

மலேசியா: கார் மீது மெல்லு மிட்டாயை ஒட்டிய சிறுவனை அடித்த ஆடவர் மீது விசாரணை

கார் மீது Chewing Gum எனும் மெல்லு மிட்டாயை ஒட்டிய சிறுவனை அடித்ததாக நம்பப்படும் ஆடவரை காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பேராக் மாநிலத்தில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

அது குறித்து Facebook -இல் காணொளி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து காவல்துறையினர் கடந்த திங்கட்கிழமை அந்த ஆடவர் மீது வழக்குப் பதிவு செய்ததாக அதிகாரி தெரிவித்தார்.

தற்போது சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆடவர் சிறுவனை அடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டிருந்தது. காணொளியில் சிறுவனை ஆடவர் திட்டுவதும் பதிவாகியிருக்கிறது. 

Top