Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் இலவசமாகக் கோழி விநியோகம் செய்த அம்னோ கட்சியினருக்கு அபராதம்

மலேசியாவில் கூட்டம் கூட்டி, உறையவைக்கப்பட்ட கோழியை இலவசமாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்திருந்த அம்னோ கட்சியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசியாவில் கூட்டம் கூட்டி, உறையவைக்கப்பட்ட கோழியை இலவசமாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்திருந்த அம்னோ கட்சியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வை நடத்தக் கட்சியினர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறவில்லை.

புத்ராஜயா வட்டாரத்தில் அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மலேசியாவின் பல இடங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நடப்பில் உள்ளது. மேலும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று விளம்பரப்படுத்தியதால், இலவசக் கோழியைப் பெற கூட்டம் கூடியது.

மொத்தம் 2,000 கோழிகள் வழங்கப்பட்டன.

இதனால் அங்கு கட்டுப்பாட்டு நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

நிகழ்வின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.

அதில் மக்கள் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் கூட்டமாகச் செல்வது பதிவாகியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்