Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் பிணையில் விடுதலை

இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். 

வாசிப்புநேரம் -
இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் பிணையில் விடுதலை

(படம்: AFP/Money SHARMA)

இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.

106 நாள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், எதிர்க்கட்சியினருக்கு எதிரான நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 73 வயது திரு. சிதம்பரம், 200,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்பட்டதன் தொடர்பில் எவ்விதக் கருத்துகளையும் தெரிவிக்கக்கூடாது என்பது பிணையின் நிபந்தனைகளில் ஒன்று.

திரு. சிதம்பரம், இரண்டு முறை இந்தியாவின் நிதி அமைச்சராகவும் ஒருமுறை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

கையூட்டு வாங்கியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது, சட்டவிரோதமான வகையில் மலேசியத் தொலைத்தொடர்பு நிறுவனத்தை வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.

அவரின் மகனும் வேறு சில அரசாங்க அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம், புதுடில்லியில் இருக்கும் அவரின் வீட்டுச் சுவரைத் தாண்டிக் குதித்து மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திரு. சிதம்பரத்தைக் கைதுசெய்தனர்.

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதைக் காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்