Images
  • sulaiman
    (படம்: Facebook/Sulaiman Md Ali)

மலாக்காவின் 13ஆவது முதலமைச்சராக அம்னோ கட்சியின் சுலைமான் பதவியேற்றார்

மலேசிய மாநிலமான மலாக்காவின் 13ஆவது முதலமைச்சராக அம்னோ கட்சியின் சுலைமான் முகமது அலி (Sulaiman Md Ali) பதவியேற்றுள்ளார்.

இன்று காலை அவர் தமது நியமனக் கடிதத்தைப் பெற்றதோடு பதவிப் பிரமாணமும் செய்துவைக்கப்பட்டார்.

நேற்று மலாக்கா மாநிலத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் தேசிய முன்னணி (Barisan Nasional) கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

28 இடங்களில் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றியது.

தேசிய முன்னணி (Barisan Nasional) கூட்டணியின் முக்கியக் கட்சியாக அம்னோ (UMNO)உள்ளது.

அதை வழிநடத்தும் புதிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் (Ismail Sabri Yaakob) செல்வாக்கைச் சோதிக்கும் தேர்தலாக மலாக்கா தேர்தல் பார்க்கப்பட்டது.

தேர்தலில் முன்னாள் பிரதமர் முஹிதீன் யாசினின் (Muhyiddin Yassin)பெரிக்கட்டான் நேசனல் (Perikatan Nasional), திரு அன்வார் இப்ராஹிமின் (Anwar Ibrahim) பக்கட்டான் ஹரப்பான் (Pakatan Harapan) கூட்டணி ஆகியவையும் களமிறங்கின.  

Top