Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

3 ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தையின் பெயரைப் பதிவுசெய்யமுடியவில்லை...காரணம்..பெயரின் நீளமாம்!

3 ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தையின் பெயரைப் பதிவுசெய்யமுடியவில்லை...காரணம்..பெயரின் நீளமாம்!

வாசிப்புநேரம் -
3 ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தையின் பெயரைப் பதிவுசெய்யமுடியவில்லை...காரணம்..பெயரின் நீளமாம்!

Unsplash

குழந்தை பிறந்தால், அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்துப் பெற்றோர் பலர் ஆழ்ந்து யோசிப்பதுண்டு.

அர்த்தமுள்ள பெயரைச் சூட்டவேண்டும் என்று பெற்றோர் எண்ணலாம்...

இந்தோனேசியாவிலுள்ள ஒரு தம்பதியும் அவ்வாறே செய்தனர்...

ஆனால், பெயரைப் பதிவுசெய்யமுடியாது என்று கையை விரித்துவிட்டனர் அதிகாரிகள்.

காரணம்....பெயரின் நீளம்!

அது குறித்து CNN Indonesia செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர் 'Rangga Madhipa Sutra Jiwa Cordosega Akre Askhala Mughal Ilkhanat Akbar Sahara Pi-Thariq Ziyad Syaifudin Quthuz Khoshala Sura Talenta'.

19 வார்த்தைகளைக் கொண்ட அந்தக் குழந்தையின் பெயர், ஒரு பிரார்த்தனையைச் சார்ந்தது எனப் பெற்றோர் கூறினர்.

எனவே, அந்தப் பெயரைப் பதிவுசெய்யமுடியாது என்று அதிகாரிகள் கூறியபோது, பெற்றோரும் பெயரை மாற்றத் தயங்கினர்.

அவர்கள், இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுக்கு (Joko Widodo) ஒரு கடித்ததை அனுப்பினர்.

அதில், குழந்தையின் பிறப்பு சான்றிதழைப் பெறப் பெயரை ஏற்றுக்கொள்ளுமாறு பெற்றோர் கோரியதாக CNN சொன்னது.

இருப்பினும், அரசாங்க ஆவணங்களில் அதிகபட்சம் 55 எழுத்துகள் கொண்ட பெயர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

மிக நீண்ட பெயர்களை வைப்பதால், அரசாங்க ஆவணங்களில் எழுத்துப் பிழை உருவாகும் வாய்ப்புகள் அதிகரிப்பதாகக் கூறப்பட்டது.

பெற்றோர், குழந்தைகளுக்குக் குறுகிய பெயர்களை வைக்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்