Images
  • China fl
    ( படம் :REUTERS/Stringer )

சீனாவைச் சின்னாபின்னமாக்கிவரும் மழை,வெள்ளம்

கடுமையான மழை; இடி மின்னலுடன் புயல்காற்று - சீனாவின் ஷாங்காய் நகரைப் புரட்டி எடுத்துவருகிறது.

பல சாலைகள் பழுதாகியுள்ளன; பாலங்கள் உடைந்துபோயின; போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

இன்று மேலும் கனத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. தென்மேற்கு மாநிலமான சிஷுவானில் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை 15 பேர் வெள்ளத்துக்கு பலியாகிவிட்டனர்.

மழையின் அளவு மணிக்கு 80 மில்லிமீட்டரைத் தாண்டக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்து

Top