Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வளரும் நாடுகளில் பல்லுயிர்ச் சூழலுக்கு ஆதரவளிக்க சுமார் 230 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கிய சீனா

 வளரும் நாடுகளில் பல்லுயிர்ச் சூழலுக்கு ஆதரவளிக்க சுமார் 230 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கிய சீனா

வாசிப்புநேரம் -

சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) , வளரும் நாடுகளில் பல்லுயிர்ச் சூழலுக்கு ஆதரவளிக்க, சுமார் 230 மில்லியன் டாலர் நிதியை அறிவித்துள்ளார்.

மற்ற தரப்புகளிடம் இருந்தும் நிதி ஆதரவை வரவேற்பதாக அவர் சொன்னார்.

குன்மிங் நகரில் நடைபெற்ற அனைத்துலகப் பல்லுயிர்ச் சூழல் தொடர்பான உச்சநிலை மாநாட்டில் இணையம் வழி கலந்துகொண்டு சீன அதிபர் பேசினார்.

பசுமை சார்ந்த செயல்முறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் காணவும், அனைவருக்காகவும் பசுமை தொடர்பான மேம்பாட்டுக்கு ஒன்றிணைந்து செயல்படவும் சீனா உறுதியளித்தது.

பல்லுயிர்ச் சூழலின் பாதுகாப்பை வலுப்படுத்த, பாதுகாப்புடன் கூடிய வட்டார முறையை அமைப்பதற்குச் சீனா விரைந்து செயல்படுவதாகவும் திரு. சி கூறினார்.

அதற்கென முதல் தொகுதி நிலப்பரப்பைச் சீனா ஏற்கனவே ஒதுக்கியிருக்கிறது.

அதன்படி, 230,000 சதுரக் கிலோமீட்டர் நிலப்பரப்பு பாதுகாக்கப்படும்.

கிளாஸ்கோவில் (Glasgow) இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கும் பருவநிலை உச்சநிலை மாநாட்டுக்கு முன்னர், தற்போதைய சந்திப்பு நடைபெறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்