Images
  • china river
    (படம்: AP/ Xinhua News Agency/Zhan Yan)

சீனா: ஆற்றுக்குள் பேருந்து விழுந்ததில் 13 பேர் மரணம்

சீனாவில் ஹெபேய் (Hebei) நகருக்கு அருகில் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் பேருந்து விழுந்த சம்பவத்தில் 13 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தப் பேருந்தில் இருந்த மேலும் 37 பேர் காப்பாற்றப்பட்டதாக அரசாங்க ஊடகமான CCTV தகவல் அளித்தது.

அவர்களில் 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் ஒருவர் காணாமற் போனதாகக் கூறப்பட்டது.

ஆற்றுப் பாலத்தை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டதால் அதனைக் கடக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் அந்தப் பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து பாலத்தில் பேருந்தைச் செலுத்தினார். சம்பவத்தைத் தொடர்ந்து அவர் தடுத்து வைக்கப்பட்டார்.

இதற்கிடையே, பெய்ச்சிங் அருகிலுள்ள இரு மாநிலங்களில் கனத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் விவசாய நிலங்களும் வீடுகளும் சேதமாகின.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 120,000க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கு, ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. 190,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்களும் வெள்ளத்தால் வீணாகின.






Top