Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மற்றொரு COVID-19 தடுப்புமருந்துக்குச் சீனா ஒப்புதல்

சீனாவில் இதுவரை சுமார் 800 மில்லியன் முறை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -


சீனா, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மற்றொரு COVID-19 தடுப்புமருந்தைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அது சீனாவில் தயாரிக்கப்பட்ட 7ஆவது தடுப்புமருந்து.

தடுப்பூசி போடும் பணிகளை மேலும் துரிதப்படுத்த சீனா அந்த முடிவை எடுத்துள்ளது.

ஆக அண்மைய தடுப்புமருந்து, குன்மிங் (Kunming) நகரில் உள்ள மருத்துவ அறிவியல் கழகத்தால் தயாரிக்கப்பட்டது என்று Global Times நாளேடு கூறியது.

தடுப்புமருந்தால் உடலில் தூண்டப்படும் எதிர்ப்புச் சக்தி, புதிய வகைக் கிருமிகளையும் மட்டுப்படுத்துவதை ஆய்வுகள் சுட்டுகின்றன.

ஆண்டுக்குச் சுமார் 500 மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பு மருந்துகளைக் கழகம் தயாரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

சீனாவில் இதுவரை சுமார் 800 மில்லியன் முறை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இவ்வாண்டு இறுதிக்குள் மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினருக்காவது தடுப்பூசியைப் போட்டுவிடச் சீன அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்