Images
  • china jap
    Reuters

சீனாவைக் குறிவைத்தே ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் தற்காப்பு உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ளன: சீன ஊடகம்

சீனாவைக் குறிவைத்தே ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் தற்காப்பு உடன்பாட்டைச் செய்து கொண்டதாக சீனாவின் Global Times நாளேடு குறைகூறியுள்ளது.

அதன் தலையங்கத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடுகள் மற்றொரு நாட்டுக்கு எதிராக இணைந்து செயல்பட்டால், வட்டாரத்தின் அமைதியான வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் அத்தகைய கூட்டணியை உருவாக்குவது உத்திபூர்வ அபாயங்களை ஏற்படுத்தக் கூடும் என்று Global Times எச்சரித்துள்ளது.

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா ஆதரவு திரட்டுவதைப் பார்த்துக் கொண்டு பெய்ச்சிங் அமைதியாக இருக்கப் போவதில்லை என்று தலையங்கம் சுட்டுகிறது.

அமெரிக்கத் தூண்டுதலின் பேரில், சீனாவுடன் மோதல்களில் ஈடுபட முயல வேண்டாம் என்று ஜப்பானையும் ஆஸ்திரேலியாவையும் அது எச்சரித்துள்ளது.  

Top