Images
  • bitcoin
    (படம்: Pixabay)

சீனாவில் கள்ளப் பணத்தை மின்னிலக்க நாணயம் மூலம் நல்ல பணமாக மாற்ற முயன்றாகச் சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கானோர் கைது

சீனாவில் தொலைபேசி, இணைய மோசடி மூலம் பெறப்பட்ட கள்ளப் பணத்தை, மின்னிலக்க நாணயத்தின்மூலம் நல்ல பணமாக மாற்ற முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின்னிலக்க நாணய வர்த்தகம் தொடர்பான சோதனை நடவடிக்கைகளை, அதிகாரிகள் அண்மையில் தீவிரப்படுத்தினர்.

அப்போது, சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக, சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.

மின்னிலக்க நாணயத்தைப் பயன்படுத்தி கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்ற முயன்ற, 170 குற்றக் கும்பல்களில் முயற்சிகளை, நேற்று முன்தினம் அதிகாரிகள் முடக்கினர்.

மின்னிலக்க நாணயங்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அதிகாரிகள் கூறினர்.  

Top