Images
  • China Blast
    (படம்: AFP/STR) 

சீனா: தொழிற்சாலை வெடிப்புச் சம்பவத்தின் தொடர்பில் மேலும் 17 சந்தேக நபர்கள் கைது

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சீனாவின் ஜியாங்சு (Jiangsu) வட்டாரத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தின் தொடர்பில் மேலும் 17 சந்தேக நபர்களைக் காவல்துறை தடுத்துவைத்துள்ளது.

சென்ற மாதம் 21ஆம் தேதி நடந்த சம்பவத்தில் 80 பேர் மாண்டனர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

அண்மை ஆண்டுகளில் நடந்த ஆக மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து அந்த இரசாயனத் தொழிற்சாலை மூடப்பட்டது.

இதுவரை கைதான மொத்தம் 26 பேர் மீதும் சீனக் காவல்துறை, குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நேற்றுக் கைதானோரில், தொழிற்சாலையை நடத்தும் தியான்ஜியாயி (Tianjiayi) நிறுவனம், அதற்குத் திட்ட மதிப்பீடுகளை வழங்கிய மூன்றாம் தரப்பு நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்தோரும் அடங்குவர். 

Top