Images
  • China Bridge
    (படம்: Twitter)

சீனா: பாலம் இடிந்து விழுந்ததில் மூவர் மரணம்


சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மாநில நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூவர் மாண்டனர்.

மேலும் இருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வூசி (Wuxi) நகரில் இடிந்து விழுந்த பாலம் அதனடியில் இருந்த மூன்று கார்கள் மீது விழுந்தது.

அதில் இரு கார்களிலிருந்த மூவர் மாண்டனர்.

மூன்றாவது வாகனத்தில் ஆளில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் இடிந்து விழுந்தபோது அதின் மேலிருந்த மூன்று கார்களும் இரு சரக்கு வண்டிகளும் விழுந்தன.

பாலம் இடிந்து விழும் காட்சி சமூக ஊடகங்களில் காணொளி மூலம் பரவி வருகிறது.

இடிபாடுகளுக்குள் கார்கள் சிக்கிக் கிடக்கின்றன.

விபத்து நடந்த இடத்தில் மருத்துவ உதவி வாகனங்களைக் காண முடிகிறது.

மிதமிஞ்சிய அளவு பாரம் ஏற்றிச்சென்ற வாகனத்தின் காரணமாகப் பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.  

Top