Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா ராணுவத்திற்குச் செலவிடும் தொகையை 6 விழுக்காட்டுக்கு மேல் உயர்த்தியது

சீனா ராணுவத்திற்குச் செலவிடும் தொகையை 6 விழுக்காட்டுக்கு மேல் உயர்த்தியது

வாசிப்புநேரம் -

சீனா, அதன் ராணுவத்தை மேலும் வலுப்படுத்த இந்த ஆண்டு சுமார் 178 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது.

அது சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 6.6 விழுக்காடு அதிகம்.

வருடாந்தர நாடாளுமன்றக் கூட்டத்தின் தொடக்கத்தில் அதுபற்றி அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு முன்னுரைக்கப்பட்ட நிதியை விட சீனா இந்த ஆண்டு, குறைவான நிதியையே
தற்காப்புக்கு ஒதுக்கியுள்ளது.

கொரோனா கிருமிப் பரவலால், சீனாவின் பொருளியல் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 6.8 விழுக்காடு சுருங்கியது.

கிருமித்தொற்றால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உரசல் அதிகரித்து வருகிறது.

இவ்வேளையில் இரு நாடுகளும் தென் சீனக் கடல் பகுதியிலும், தைவான் அருகிலும் தொடர்ந்து படைபலத்தை வலுப்படுத்தி வருகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்